காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை போலீஸ் விசாரணை


காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 7 Dec 2020 7:20 AM IST (Updated: 7 Dec 2020 7:20 AM IST)
t-max-icont-min-icon

மேல்மலையனூர் அருகே காதல் திருமணம் செய்த இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேல்மலையனூர்,

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே அவலூர்பேட்டையை சேர்ந்தவர் பழனி மகன் பச்சையப்பன் (வயது 24). கூலி தொழிலாளி. இவரும், திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா வெள்ளக்குளம் கிராமத்தை சேர்ந்த சேகர் மகள் ஷாலினி (23) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி 1 ஆண்டு ஆகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம், ஷாலினி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் ஷாலினி பரிதாபமாக உயிரிழந்தார்.

வரதட்சணை கொடுமை

இது குறித்து ஷாலினியின் தந்தை சேகர் அவலூர்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதில் தன் மகள் ஷாலினியை பச்சையப்பன், அவரது தந்தை பழனி, தாய் பத்மினி, இவர்களது மகன் வேல்முருகன் ஆகியோர் சேர்ந்து சாதி பெயரை சொல்லி திட்டி, வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளனர். இதனால் தன் மகள் ஷாலினி தற்கொலை செய்து கொண்டதாகவும், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அதன் பேரில் பச்சையப்பன், பழனி, பத்மினி, வேல்முருகன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story