சாகுபடி நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


சாகுபடி நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Dec 2020 8:39 AM IST (Updated: 7 Dec 2020 8:39 AM IST)
t-max-icont-min-icon

விவசாய விளை நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து பொங்கலூர் அருகே விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பொங்கலூர்,

கோவை மாவட்டம் இருகூரில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி வழியாக பெங்களூரு வரை ரூ.120 கோடி மதிப்பீட்டில் நிலத்தடியில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய்கொண்டு செல்ல விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதற்காக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் அமைப்பதை தவிர்த்து சாலை ஓரங்களில் எரிவாயு குழாய் அமைத்து கொண்டு செல்ல வேண்டும் என விவசாயிகளின் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனாலும் சில இடங்களில் பாரத் பெட்ரோலிய நிறுவனம் மற்றும் வருவாய்த் துறை இணைந்து விவசாய நிலங்களில் நில அளவீடு செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த இடங்களில் விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.

ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம், சின்ன ஆனங்கூர் பகுதியில் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விவசாயிகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தையும் மீறி நில அளவீடு செய்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து பொங்கலூரை அடுத்த கண்டியன்கோவில், குளத்துப்பாளையம் பகுதியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயி முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். அப்போது பாரத் பெட்ரோலியம் நிறுவனம் மற்றும் வருவாய்த்துறை அதற்கு எதிராக கோஷங் களை எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Next Story