கும்மிடிப்பூண்டியில் புதிய சார்-பதிவாளர் அலுவலகம் திறப்பு: அரசு விழாவில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்; 8 பேர் கைது
கும்மிடிப்பூண்டியில் அரசு விழாவின்போது கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெத்திக்குப்பம் ஊராட்சியை சேர்ந்த நிர்வாகிகள் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
சார்-பதிவாளர் அலுவலகம் திறப்பு
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் புதிதாக ரூ.94 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சார்-பதிவாளர் அலுவலகத்தை நேற்று தலைமை செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இந்த புதிய அரசு கட்டிடம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் பெத்திக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்து உள்ளது. கும்மிடிப்பூண்டி சார்-பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இதற்கான திறப்பு
விழா நிகழ்ச்சிக்கு கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ.கே.எஸ்.விஜயகுமார் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழுத்தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார், ஒப்பந்ததாரர் டி.சி.மகேந்திரன், சார்-பதிவாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் சார்-பதிவாளர் அலுவலகத்திற்கு வெளியே, தங்களது ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் திறக்கப்படும் புதிய அரசு கட்டிடத்திற்கு முறையான அழைப்பு இல்லை என கூறி தமிழக அரசை கண்டித்து பெத்திக்குப்பம் ஊராட்சி சார்பில் ஊராட்சி மன்ற பெண் தலைவரின் ஆதரவாளர்கள், துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் சிலர் கருப்பு உடை அணிந்தும், கருப்பு கொடி ஏந்தியும் திடீர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனல் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.
இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் கைது செய்து, பின்னர் மதியம் விடுவித்தனர்.
Related Tags :
Next Story