வேளாண்மை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் 187 பேர் கைது
வேளாண்மை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து கோவையில் சாலை மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 187 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை,
மத்திய அரசு கொண்டு வந்து உள்ள வேளாண்மை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் கம்யூனிஸ்டு கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதன் ஒருபகுதியாக கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளின் சார்பில் கோவை காந்திபுரம் அரசு விரைவு பஸ் நிலையம் அருகே நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்காக கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் அங்கு திரண்டனர்.
187 பேர் கைது
அப்போது அங்கு போலீசார் சார்பில் தடுப்புகள் வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை நிர்வாகிகள் தாண்டி சாலையை மறித்து அங்கு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வேளாண்மை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 187 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் வி.ராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர்கள் சி.பத்மநாபன், என்.அமிர்தம், ஏ.ராதிகா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம், மாநில பொருளாளர் எம்.ஆறுமுகம், நிர்வாகிகள் சிவசாமி, தேவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். கைதான அனைவரும் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

Related Tags :
Next Story