நெல்லையில் முழு அடைப்பு போராட்டம்: விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை மறியல்
நெல்லையில் முழுஅடைப்பு போராட்டத்தையொட்டி விவசாயிகளுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினர், தொழிற்சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நெல்லை,
மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக நேற்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த போராட்டத்துக்கு தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. மேலும் 18 தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்தன.
சாலை மறியல்
நெல்லை மாவட்டத்தில் நெல்லை மாநகரம், சேரன்மாதேவி, முக்கூடல், அம்பை, ராதாபுரம், வள்ளியூர் ஆகிய 6 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. நெல்லை வண்ணார்பேட்டையில் தொழிற்சங்கம் சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. தொ.மு.ச. அமைப்பு செயலாளர் தர்மன், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மோகன் ஆகியோர் தலைமை தாங்கினர். மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப், போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.
இந்த போராட்டத்தில், தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ்., எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தொழிற்சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் பெருமாள், முருகன், ராமராஜ், மகாவிஷ்ணு, கணேசன், சர்புதீன், உலகநாதன், அலாவுதீன், செய்யது உள்ளிட்டவர்கள் திடீரென்று சாலையில் உட்கார்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் மறியலில் ஈடுபட்ட 77 பேரை போலீசார் கைது செய்து பாளையங்கோட்டையில் உள்ள நூற்றாண்டு மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
டவுன்-மேலப்பாளையம்
நெல்லை டவுன் சந்தி பிள்ளையார் கோவில் முக்கு பகுதியில் கம்யூனிஸ்டு தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சுடலை ராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சார்பில் சுந்தர்ராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வரகுணன், பாலு, சங்கரபாண்டியன், செந்தில் உள்பட 57 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் மேலப்பாளையத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் எதிரே உள்ள தனியார் பல்பொருள் அங்காடியை இழுத்து மூடும் போராட்டத்தை காங்கிரஸ் கட்சியினர் அறிவித்திருந்தனர். அவர்கள் நேற்று காலை அந்த பல்பொருள் அங்காடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஈடுபட்ட சங்கரபாண்டியன், ராஜேஷ் முருகன் உள்பட 24 பேரை போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். நெல்லை மாநகர் பகுதியில் மட்டும் சாலை மறியலில் ஈடுபட்ட 163 பேரை போலீசார் கைது செய்தனர்.
443 பேர் கைது
இதுதவிர சேரன்மாதேவி, முக்கூடல், அம்பை, ராதாபுரம், வள்ளியூர் ஆகிய பகுதியில் நடந்த சாலை மறியலில் 280 பேரை போலீசார் கைது செய்தனர். அதில் 60 பேர் பெண்கள் ஆவார்கள். நெல்லை மாவட்டம் முழுவதும் மொத்தம் 443 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அம்பை பூக்கடை பஜாரில் நடந்த மறியல் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பாஸ்கரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் விஸ்வநாதன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஒன்றிய செயலாளர்கள் ரவீந்திரன், ராமகிருஷ்ணன், புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 35 பெண்கள் உள்பட 101 பேரை போலீசார் கைது செய்தனர். விவசாயிகளுக்கு ஆதரவாக அம்பை ஒருங்கிணைந்த கோர்ட்டில் வக்கீல்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் ராதாபுரம் பஸ் நிலையம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முத்துக்குமார், சங்கர் உள்பட 25 பேரை போலீசார் கைது செய்தனர். சேரன்மாதேவி பஸ் நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. வீரவநல்லூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மறியலில் ஈடுபட்ட 54 பேரை போலீசார் கைது செய்தனர்.
வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
விவசாயிகளுக்கு ஆதரவாக நெல்லை வக்கீல் சங்கம் சார்பில் வக்கீல்கள் கோர்ட்டுகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாளையங்கோட்டையில் உள்ள கோர்ட்டு முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வக்கீல் சங்க செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். இதில் வக்கீல் சங்க நிர்வாகிகள் மணிகண்டன், பழனி, அருண்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. நெல்லை மாநகர பகுதியில் வண்ணார்பேட்டையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை, வண்ணார்பேட்டை புறவழிச்சாலையில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை, விரைவு போக்குவரத்து கழக பணிமனை, கே.டி.சி. நகரில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை, சமாதானபுரத்தில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை உள்ளிட்ட 6 இடங்களில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் பணிக்கு சென்றனர்.

Related Tags :
Next Story