நாகை நம்பியார் நகரில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் அமைச்சர் வேலுமணி தகவல்
நாகை நம்பியார் நகரில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம்,
நாகை நம்பியார் நகரில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஓ.எஸ்.மணியன் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
நாகை மாவட்டத்திற்கு நிறைய திட்டங்களை அ.தி.மு.க. அரசு கொண்டு வந்துள்ளது. கஜா புயல் பாதிப்பை பார்வையிட வந்த போது நம்பியார் நகர் பகுதியில் சிறிய மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து இந்த பகுதியில் சிறிய மீன்பிடி துறைமுகம் அமைக்க தன்னிறைவு திட்டத்தின் கீழ் ரூ.34 கோடியே 30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த தொகையில் நம்பியார் நகர் பகுதி மக்கள் தன்னிறைவு திட்டத்திற்காக ரூ.11 கோடியே 43 லட்சம் கொடுத்துள்ளனர். கட்டுமான பணிகள் தொடங்க பூமி பூஜை போடப்பட்டுள்ளது.
விரைவில் தொடங்கப்படும்
டெல்லியில் இருந்து சுற்றுச்சூழல்துறையிடமிருந்து அனுமதி கிடைக்காததால் இன்னும் கட்டுமான பணிகள் தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் சரி செய்யப்பட்டு விரைவில் மீன்பிடி துறைமுகம் கட்டும் பணிகள் தொடங்கப்படும். இடைத்தரகர்கள் கையில் விவசாயிகள் சென்று விடக்கூடாது என்பதற்காக தான் புதிய வேளாண் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தால் தமிழகத்தில் ஒரு விவசாயிக்கு கூட பாதிப்பு ஏற்படாது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
புரெவி புயல் காரணமாக நாகை மாவட்டத்தில் பயிர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இவை எல்லாம் கணக்கெடுக்கப்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும். புயலால் பாதித்த பகுதிகளை பார்வையிட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (அதாவதுநேற்று) இரவு நாகைக்கு வருகிறார். நாளை (இன்று) காலை முதல் பாதிக்கப்பட்ட பொதுமக்களை சந்தித்து, தேவையான நிவாரணத்தொகையை அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம், நல்லாடை கிராமத்தில் மழைநீரில் மூழ்கியுள்ள நெற்பயிர்களை அமைச்சர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.
இந்த ஆய்வின் போது பேரூராட்சிகளின் இயக்குனர் பழனிசாமி, நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன், கூடுதல் கலெக்டர் பிரசாந்த், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ஆசைமணி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story