வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விழுப்புரம் மாவட்டத்தில் சாலை மறியல்; 920 பேர் கைது
வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விழுப்புரம் மாவட்டத்தில் 11 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 920 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 20 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம்,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை கண்டித்தும், அந்த சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழு மற்றும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்தை நடத்தினர். இதையொட்டி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் காந்தி சிலை அருகில் அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழு மற்றும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் புகழேந்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.வி.சரவணன், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சீனுவாசக்குமார், நகர தலைவர் செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. ராமமூர்த்தி, மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆற்றலரசு, மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் முஸ்தாக்தீன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் குமரன், இந்திய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஜனகராஜ், மாவட்ட துணை செயலாளர் புஷ்பராஜ், மாநில மருத்துவர் அணி இணைச்செயலாளர் டாக்டர் லட்சுமணன், மாநில விவசாய அணி துணை செயலாளர் அன்னியூர் சிவா மற்றும் நகர, ஒன்றிய நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், விவசாய சங்கத்தினர் பலர் கலந்துகொண்டு வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
சாலை மறியல்
மேலும் விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு அருகில் அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.வி.சரவணன், போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் விவசாய சங்க மாவட்ட தலைவர் சகாபுதீன், மாவட்ட செயலாளர் முருகன், மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மோகன்ராஜ், இந்திய விவசாயிகள் மகா சபையின் பொறுப்பாளர் செண்பகவள்ளி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். உடனே போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட 119 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
செஞ்சி
இதேபோல், செஞ்சியில் தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ. தலைமையில் செஞ்சி பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக சென்று, செஞ்சி கூட்டு ரோடு அருகே மறியலில் ஈடுபட்டனர். இதில் விவசாய அணி மாநில இணைசெயலாளர் செந்தமிழ்ச்செல்வன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரங்கபூபதி, காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் சண்முகம், விவசாய பிரிவு மாவட்ட செயலாளர் ஜோலா தாஸ், ம.தி.மு.க. மாநில துணை பொதுச்செயலாளர் ஏ.கே. மணி, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் விஜயகுமார், நெடுஞ்செழியன், விஜயராகவன், நகர செயலாளர் காஜா நஜீர், மாவட்ட விவசாய அணி அரங்க ஏழுமலை, அஞ்சாஞ்சேரி, கணேசன், ஜான்பாஷா, சோகுப்பம் ராஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஏழுமலை, த.மு.மு.க. மாவட்ட செயலாளர் சையத் உஸ்மான், முஸ்லிம் லீக் நகர தலைவர் அப்துல் அஜீஸ், மாவட்ட துணை செயலாளர் சபியுல்லா, மாவட்ட மாணவரணி சையத் பாபா உள்பட 280 பேர் கைது செய்யப்பட்டனர். முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயற்சித்தபோது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. மயிலம் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த வல்லம், ஒலக்கூர், மயிலம் ஒன்றியங்களை சேர்ந்த தி.மு.க.வினர் விவசாயிகளுக்கு ஆதரவாக நாட்டார் மங்கலத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கு மயிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் மாசிலாமணி தலைமை தாங்கினார். தலைமை தீர்மான குழு உறுப்பினர் செஞ்சி சிவா முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் வல்லம் (வடக்கு) அண்ணாதுரை, (தெற்கு) துரை, ஒலக்கூர் (மேற்கு) ராஜாராம், மயிலம் (வடக்கு) மணிமாறன், வல்லம் ஒன்றிய பொருளாளர் தமிழரசன் மற்றும் கண்ணன், இளம்வழுதி, வெங்கடேசன், லட்சுமணன், பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மயிலம்
மயிலம் கூட்டேரிப்பட்டில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். முன்னதாக அவர்கள், காஸ்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ஆர்.பி. ரமேஷ் தலைமையில் டிராக்டர் மற்றும் ஏர் கலப்பைகளுடன் மயிலம் பஸ் நிறுத்தத்தில் இருந்து பேரணியாக கூட்டேரிபட்டுக்கு புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் அவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் இல.கண்ணன், மாவட்ட பார்வையாளர் திலகர், மாவட்ட பொருளாளர் கருணாகரன், திண்டிவனம் நகர தலைவர் விநாயகம், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயசுதா, மயிலம் தொகுதி ஊடகப்பிரிவு தலைவர் சுரேஷ்பாபு, மயிலம் வடக்கு வட்டாரம் மெடிக்கல் செல்வம், நகர தலைவர்கள் குமார், வக்கீல் சக்திவேல், வட்டார தலைவர்கள் கோவிந்தன், சுப்பிரமணி, காத்தவராயன், புவனேஸ்வரன், ஜனார்த்தனம், பழனி, முருகன், சரவணன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மயிலம் கூட்டேரிப்பட்டில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் வக்கீல் சேதுநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மயிலம் ஒன்றிய செயலாளர் கலைச்செல்வன் ஆகியோர் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். இதில் தி.மு.க. மாவட்ட பொருளாளர் ரவி, சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் அன்சாரி, தொண்டரணி துணை அமைப்பாளர் சசிகுமார், கவுன்சிலர் செழியன், இணைய துல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் தமிழரசன், கோவிந்தசாமி, ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விக்கிரவாண்டி
இதுதவிர விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் முன்பு அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினர் அதன் மாவட்டக்குழு உறுப்பினர் சந்திரா தலைமையிலும், கோட்டக்குப்பத்தில் தி.மு.க. நகர தலைவர் ஜெயமூர்த்தி தலைமையிலும், திருச்சிற்றம்பலம் கூட்டுசாலையில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் முரளி தலைமையிலும், வானூரில் தி.மு.க. கிளை தலைவர் ராஜவேல் தலைமையிலும், கிளியனூரில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜி தலைமையிலும், விக்கிரவாண்டியில் தி.மு.க. நகர செயலாளர் நயினாமுகமது தலைமையிலும், மேல்மலையனூரில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமையிலும், பனமலைப்பேட்டையில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் முருகன் தலைமையிலும், கண்டமங்கலத்தில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமையிலும், வளத்தியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் செயற்குழு உறுப்பினர் உதயகுமார் தலைமையிலும், காணையில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் கல்பட்டு ராஜா தலைமையிலும், கண்டாச்சிபுரத்தில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையிலும், திண்டிவனத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வட்ட செயலாளர் ராமதாஸ் தலைமையிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டிவனம்
இதுதவிர திண்டிவனத்தில் சீத்தாபதி சொக்கலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட மரக்காணம் மேற்கு ஒன்றிய செயலாளர் பழனி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சேரன் உள்பட 101 பேரும், திருவெண்ணெய்நல்லூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சவுரிராஜன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 41 பேரும், செஞ்சியில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியின் மாவட்ட தலைவர் சுசீலா தலைமையில் மறியலில் ஈடுபட்ட 31 பேரும், ஆலம்பூண்டியில் அகில இந்திய விவசாயிகள் சங்க வட்டக்குழு உறுப்பினர் மாதவன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 60 பேரும், மரக்காணத்தில் தி.மு.க. நகர செயலாளர் ரவிக்குமார் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 60 பேரும், அரகண்டநல்லூரில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 36 பேரும், கண்டமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் குப்புசாமி தலைமையில் மறியலில் ஈடுபட்ட 17 பேரும், கூட்டேரிப்பட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் கலைச்செல்வன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 75 பேரும், நாட்டார்மங்கலத்தில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை தலைமையில் மறியலில் ஈடுபட்ட 100 பேரும் கைது செய்யப்பட்டனர்.
920 பேர் கைது
ஆக மொத்தம் மாவட்டத்தில் 11 இடங்களில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 920 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான இவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
இதேபோல் விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை எண் 1-ன் முன்பு தொ.மு.ச. தலைவர் ஞானசேகரன் தலைமையிலும், விழுப்புரம் பணிமனை எண் 2, 3 ஆகியவற்றின் முன்பு தொ.மு.ச. பொதுச்செயலாளர் பிரபாதண்டபாணி தலைமையிலும், திண்டிவனம் பணிமனை முன்பு தொ.மு.ச. துணைத்தலைவர் ரவிச்சந்திரன் தலைமையிலும், செஞ்சி பணிமனை முன்பு தொ.மு.ச. துணைத்தலைவர் செல்வராஜ் தலைமையிலும், மணம்பூண்டியில் உள்ள பணிமனை முன்பு தொ.மு.ச. நிர்வாகி ரகுநாதன் தலைமையிலும் அரசு போக்குவரத்துக்கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story