குலசேகரத்தில் பரிதாபம் தச்சு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை
குலசேகரத்தில் தச்சு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
குலசேகரம்,
குலசேகரம் நாகக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 46). இவர் அப்பகுதியில் பட்டறை அமைத்து தச்சு வேலை செய்து வந்தார். இவருக்கு கார்த்திகா (38) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். தற்போது, சுரேஷ் குடும்பத்துடன் இரணியல் அருகே ஆளூர் பகுதியில் வசித்து வந்தார்.
சுரேஷ், தினமும் குலசேகரத்தில் உள்ள பட்டறைக்கு வந்து வேலை பார்த்து விட்டு மாலையில் ஆளூர் திரும்புவது வழக்கம். கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், கடந்த சில நாட்களாக சுரேஷ் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார்.
தற்கொலை
இந்தநிலையில், சம்பவத்தன்று சுரேஷ் வழக்கம்போல் வேலைக்கு சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடினர். அப்போது, நாகக்கோடு பகுதியில் உள்ள அவரது வீட்டு முன் சுரேஷின் கார் நிற்பதை கண்டு சந்தேகமடைந்தனர். மேலும், கதவு உள் பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. ஜன்னல் வழியாக பார்த்த போது, சுரேஷ் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர், இதுபற்றி குலசேகரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று சுரேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story