வீட்டு வேலை செய்யாததால் தாய் கண்டிப்பு: விஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை


வீட்டு வேலை செய்யாததால் தாய் கண்டிப்பு: விஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 11 Dec 2020 3:34 AM IST (Updated: 11 Dec 2020 3:34 AM IST)
t-max-icont-min-icon

வீட்டு வேலை செய்யாததை தாய் கண்டித்ததால் விரக்தி அடைந்த கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தாய் கண்டிப்பு
இளையான்குடி அருகே உள்ள ஏனாதி கிராமத்தை சேர்ந்தவர் ஜெபஸ்டின் திரவியம்.(வயது 40). இவரது மனைவி புனிதா(38). இவர்களது மகள் ரோஸ்லின் ஜெனி (17). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலை தமிழ் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த ரோஸ்லின் ஜெனியை அவரது தாய் புனிதா வீட்டு வேலைகளை ஏன் செய்யவில்லை என கூறி திட்டியதாக தெரிகிறது. இதனால் அவர் மனம் உடைந்து காணப்பட்டார்.

விஷம் குடித்து தற்கொலை
அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலி பேஸ்ட் என்ற விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் அவர் மயங்கி விழுந்தார். வெளியே சென்ற தாய் புனிதா அதிர்ச்சி அடைந்து அக்கம், பக்கத்தினரின் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக பரமக்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் 
சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து இளையான்குடி போலீசில் புனிதா புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story