தேசிய மக்கள் நீதிமன்றம் நாளை நடக்கிறது 2,163 வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன
புதுச்சேரி மாநிலத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதில் மொத்தம் 2,163 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
புதுச்சேரி,
தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் உத்தரவுபடி நாளை (சனிக்கிழமை) புதுவை மாநிலத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. புதுச்சேரி நீதிமன்ற வளாகத்தில் 9 அமர்வுகளும், சட்டப் பணிகள் ஆணைய வளாகம், காரைக்கால் மாவட்ட நீதிமன்ற வளாகம், மாகி மற்றும் ஏனாம் நீதிமன்ற வளாகங்களில் தலா ஒரு அமர்வுகளும் நடக்கிறது.
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் சமாதானம் ஆகக்கூடிய குற்ற வழக்கு, காசோலை வழக்கு, வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், கணவன்-மனைவி பிரச்சினை வழக்குகள் (குடும்ப நீதிமன்ற வழக்குகள், ஜீவனாம்சம் வழக்குகள்), உரிமையியல் வழக்குகள், தொழிலாளர் சம்பந்தப்பட்ட வழக்குகள், வங்கி கடன் சம்பந்தப்பட்ட நேரடி வழக்குகள் தேசிய நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது.
2,163 வழக்குகள்
நீதிபதிகள், அரசு வக்கீல்கள், அரசுத்துறை அதிகாரிகள், காப்பீட்டு நிறுவன அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் மற்றும் வழக்காளிகள் கலந்துகொள்கிறார்கள். இதில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், நேரடி வழக்குகள் என 2,163 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story