பேரளம் அருகே கல்லால் அடித்து வாலிபர் கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை
பேரளம் அருகே கல்லால் அடித்து வாலிபர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கான காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்னிலம்,
திருவாரூர் மாவட்டம் பேரளம் கீழத்தெருவை சேர்ந்தவர் மணி. ஓய்வு பெற்ற அரசு அலுவலர். இவரது மகன் ரமேஷ்(வயது 29). இவர், சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். இந்த நிலையில் நேற்று இரவு சாப்பிட்டு விட்டு வீட்டை விட்டு ரமேஷ் வெளியே சென்றார். பின்னர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. காலையில் பார்த்தபோது வீட்டின் அருகே ரமேஷ் தலையில் ரத்தக் காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார்.
தனது மகன் பிணமாக கிடப்பதை பார்த்த மணி கதறி அழுத்தார். பின்னர் அவர் இதுகுறித்து பேரளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த பேரளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் ரமேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்ப நாய் ‘ராக்சி’ வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடியது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்தனர்.
கல்லால் அடித்து கொலை
இதுகுறித்து பேரளம் போலீசில் மணி புகார் கொடுத்தார். அதில் தனது மகனை யாரோ மர்ம நபர்கள் கல்லால் அடித்து கொலை செய்துள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த கொலைக்கான காரணம் என்ன? அவரை அடித்து கொன்றவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story