புதுக்கோட்டை போஸ்நகரில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டுமான பணிகள் தீவிரம்


புதுக்கோட்டை போஸ்நகரில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டுமான பணி
x
புதுக்கோட்டை போஸ்நகரில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டுமான பணி
தினத்தந்தி 12 Dec 2020 3:15 AM IST (Updated: 12 Dec 2020 3:15 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை போஸ்நகரில் கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டுமான பணி தீவிரமாக நடந்து வருகிறது.

384 வீடுகள்
கடந்த 2018-ம் ஆண்டு கஜா புயலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது. பொதுமக்கள் பலர் வீடுகளையும், வாழ்வாதாரத்தையும் இழந்து தவித்தனர். இந்த நிலையில் கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுத்தது. அந்த வகையில் பல இடங்களில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் புதுக்கோட்டையில் போஸ் நகரில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 384 வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதுக்கோட்டை வந்த போது அறிவித்திருந்தார். அதன்படி போஸ்நகரில் கணேஷ் நகர் போலீஸ் நிலையம் அருகே குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டுமான பணி தொடங்கப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட கான்கிரீட் கம்பிகள் அமைக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

6 அடுக்குமாடி குடியிருப்புகள்
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், 'போஸ் நகரில் மொத்தம் 6 அடுக்குமாடி குடியிருப்புகளில் 384 வீடுகள் கட்டப்பட உள்ளன. தரைத்தளம் மற்றும் 3 தளங்களுடன் இந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. ஓராண்டுக்குள் கட்டுமான பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வீட்டிற்கான பயனாளிகள் தேர்வு விரைவில் நடைபெற உள்ளது' என்றார்.

Next Story