ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஊருக்குள் புகுந்த மானை, நாய்கள் கடித்து குதறின; கிராம மக்கள் மீட்டு, வனத்துறையினரிடம் ஒப்படைப்பு


காயம் அடைந்த மான்
x
காயம் அடைந்த மான்
தினத்தந்தி 12 Dec 2020 5:56 AM IST (Updated: 12 Dec 2020 5:56 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஊருக்குள் புகுந்த மானை, நாய்கள் கடித்து குதறின. கிராம மக்கள் மானை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

புள்ளி மான்
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியானது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள வனப்பகுதியில் யானைகள், புலிகள், சிறுத்தைகள், கரடிகள், காட்டெருமைகள், புள்ளிமான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

அவ்வப்போது கரடி, மான், காட்டெருமை உள்ளிட்டவைகள் அருகில் உள்ள மலை கிராமங்களில் புகுவது வழக்கமாகும். மேலும் கூட்டம், கூட்டமாக மான்களும் சாலையை கடந்தும் செல்லும். இந்தநிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர்- வத்திராயிருப்பு செல்லும் சாலையில் ரெங்கபாளையம் என்ற இடத்தில் கூட்டமாக மான்கள் சாலையை கடந்து சென்றன.

வனத்துறையிடம் ஒப்படைப்பு
அப்போது அதில் ஒரு புள்ளி மான் மட்டும் வழி தவறி ரெங்கம்பாளையம் கிராமத்திற்குள் புகுந்தது. உடனே அங்குள்ள நாய்கள், அந்த மானை விரட்டி சென்று கடித்தன.

இதில் காயம் அடைந்த மான் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் அடைக்கலம் புகுந்தது. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் கிராம மக்கள் காயம் அடைந்த மானை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Next Story