வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெற பாடுபட வேண்டும் அண்ணா தொழிற்சங்க பேரவை கூட்டத்தில் தீர்மானம்


வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெற பாடுபட வேண்டும் அண்ணா தொழிற்சங்க பேரவை கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 12 Dec 2020 8:48 PM IST (Updated: 12 Dec 2020 8:48 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் உள்ள அ.தி.மு.க. அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார்.

தர்மபுரி, 

தர்மபுரி மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள் ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் தர்மபுரியில் உள்ள அ.தி.மு.க. அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். தர்மபுரி மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழனிசாமி வரவேற்று பேசினார். எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் சீனிவாசன், அரசு போக்குவரத்து கழக மண்டல செயலாளர் லட்சுமணன், மண்டல தலைவர் சிவன், பொருளாளர் முனிரத்தினம், அமைப்புசாரா பிரிவு மாநில செயலாளர் சிங்கராயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில தலைவர் தாடிராசு, மாநில பொருளாளர் அப்துல் ஹமீது, துணை தலைவர் கோவிந்தராஜ், மாநில இணை செயலாளர் துளசிதாஸ் ஆகியோர் தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினர். வருகிற சட்டமன்ற தேர்தலில் தீவிரமாக பணியாற்றி அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் நாகராஜன், நகர செயலாளர் பூக்கடை ரவி, ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், பெரியண்ணன், கோபால், செந்தில்குமார், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் தகடூர் விஜயன், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் ரவிச்சந்திரன், கொளந்தைசாமி, ரவி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள், மண்டல பொறுப்பாளர்கள், அனைத்துப் பிரிவு தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கூட்டுறவு பணியாளர் சங்க மாநில செயலாளர் சின்அருள்சாமி நன்றி கூறினார்.

Next Story