2-ம் நிலை காவலர் தேர்வு மையத்தை போலீஸ் அதிகாரி ஆய்வு


2-ம் நிலை காவலர் தேர்வு மையத்தை போலீஸ் அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 13 Dec 2020 4:39 AM IST (Updated: 13 Dec 2020 4:39 AM IST)
t-max-icont-min-icon

இரண்டாம் நிலை காவலர்கள், சிறைக்காவலர்கள் மற்றும் தீயணைப்பு படை வீரர்களை தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைெபற உள்ளது.

உடையார்பாளையம், 

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலை காவலர்கள், சிறைக்காவலர்கள் மற்றும் தீயணைப்பு படை வீரர்களை தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைெபற உள்ளது. இந்த தேர்வு காலை 11 மணிக்கு தொடங்குகிறது. அரியலூர் மாவட்டத்தில் இந்த தேர்வை 6,832 பேர், மாவட்டம் முழுவதும் உள்ள 9 தேர்வு மையங்களில் எழுத உள்ளனர். இதையொட்டி தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தை அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆய்வு செய்தார். அப்போது ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

Next Story