கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் இன்றும் நடக்கிறது


கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் இன்றும் நடக்கிறது
x
தினத்தந்தி 13 Dec 2020 6:14 AM IST (Updated: 13 Dec 2020 6:14 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடந்தது

கரூர், 

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 1.1.2021 அன்று 18 வயது பூர்த்தியடைந்துள்ளவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், மேலும் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், பெயர் நீக்கம், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கும் நாளைமறுதினம் (செவ்வாய்க்கிழமை) வரை விண்ணப்பங்கள் பெற ஆணையிட்டுள்ளது. இதற்கான முதற்கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் கடந்த நவம்பர் மாதம் 21-ந்தேதி மற்றும் 22-ந்தேதிகளில் நடந்தது. அதன்பிறகு இரண்டாம் கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நேற்று கரூர் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்றது.

இன்றும்...

முகாமில் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்கவும் மற்றும் ஏராளமானோர் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், முகவரி திருத்தம் மற்றும் பெயர் நீக்கம் உள்ளிட்டவைக்கும் விண்ணப்பங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளித்தனர். முகாமில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த வாக்குச்சாவடி நிலை முகவர்கள் உதவிபுரிந்தனர். விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட உள்ளது. இதேபோல் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

நொய்யல்

நொய்யல், மரவாபாளையம், குறுக்குச்சாலை, புன்னம்சத்திரம், தவுட்டுப்பாளையம், குளத்துப்பாளையம், ஆலமரத்துமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் நேற்று காலை முதல் மாலை வரை வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், பெயர்நீக்கல், முகவரி மாற்றம், முகவரி திருத்தம் குறித்த முகாம் நடைபெற்றது.இதில் அந்தந்த பகுதியில் உள்ள வாக்காளர்கள் தங்களது பெயர்களை சேர்த்தல், இறந்தவர்கள் மற்றும் வெளியூர்களுக்கு சென்றவர்கள் பெயர் நீக்கம் செய்தல் மற்றும் முகவரி மாற்றம்செய்தல், முகவரி திருத்தம் குறித்து படிவங்களை பூர்த்தி செய்து கொடுத்தனர்.


Next Story