கடலூர் மாவட்டத்தில் 2-வது கட்டமாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்


கடலூர் மாவட்டத்தில் 2-வது கட்டமாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 13 Dec 2020 9:25 AM IST (Updated: 13 Dec 2020 9:25 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில், 2-வது கட்டமாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடந்தது.

கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி 18 வயது நிரம்பியவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் போன்ற பணிகளை மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் முதற்கட்டமாக கடந்த மாதம் 21, 22-ந்தேதிகளில் நடைபெற்றது.

இதையடுத்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 2-வது கட்டமாக டிசம்பர் 12 மற்றும் 13-ந்தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

சிறப்பு முகாம்

அதன்படி நேற்று மாவட்டத்தில் உள்ள 2,295 வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் இதர மனுக்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கப்பட்டது. காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த முகாம் மாலை 5.30 மணி வரை நடந்தது.

இந்த முகாமில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு, பெயர் சேர்த்தலுக்கு படிவம்-6, நீக்கலுக்கு படிவம்-7, திருத்தத்திற்கு படிவம்-8 மற்றும் 8 ஏ ஆகியவற்றை வழங்கினர். இந்த பணிகளை நகர, ஒன்றிய, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் வாக்குச்சாவடிகளுக்கு சென்று அரசியல் கட்சி பிரமுகர்கள் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு உதவி செய்தனர்.

Next Story