மராட்டிய மாநில அரசை கவிழ்ப்பதில் பா.ஜனதா மும்முரமாக உள்ளது; முதல்-மந்திரி குற்றச்சாட்டு
மாநில அரசை கவிழ்ப்பதில் தான் பா.ஜனதா மும்முரமாக உள்ளது என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டி உள்ளார்.
பாகிஸ்தான் விவசாயிகள்
மராட்டிய சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் 2 நாட்கள் நடைபெற உள்ளது. இந்தநிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
மராட்டியத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு இருந்தால், டெல்லியில் விவசாயிகள் குறிவைக்கப்படுவதை பார்த்தால் நாட்டில் மற்ற பகுதிகளில் அறிவிக்கப்பட்ட அவசர நிலை அமலில் உள்ளதா?. குளிர்காலத்தில் விவசாயிகள் மீது தண்ணீரை பீய்ச்சி அடிப்பது தான் மனித தன்மையா? போராட்டக்காரர்களுக்கு பாகிஸ்தான், சீனா அல்லது மாவோயிஸ்டுகள் ஆதரவு உள்ளதா என்பதை பா.ஜனதா தான் முடிவு செய்ய வேண்டும்.
நீங்கள் சா்க்கரை, வெங்காயத்தை பாகிஸ்தானில் இருந்து கொண்டு வந்தீர்கள். தற்போது விவசாயிகளும் அங்கு இருந்து வந்து உள்ளனர்.
அரசை கவிழ்ப்பதில் மும்முரம்
மாநில அரசை தரக்குறைவாக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அறிவிக்கப்படாத அவசரநிலை பிரகடனம் என்றால், அதைவிட மோசமானது உரிமைகளுக்காக போராடும் விவசாயிகளை தேச துரோகி என முத்திரை குத்துவது ஆகும். பா.ஜனதாவினர் மாநில அரசை கவிழ்ப்பதில் மும்முரமாக உள்ளனர். கடந்த ஒரு ஆண்டில் மாநில அரசு செய்த திட்டப்பணிகளை பார்க்க அவர்களுக்கு நேரமில்லை. மகாவிகாஸ் அகாடி அரசு மீது மக்களிடம் எந்த அதிருப்தியும் இல்லை.
இவ்வாறு முதல்-மந்திரி கூறினார்.
இதேபோல கவர்னர் 12 மேல்-சபை உறுப்பினர்களை நியமனம் செய்ய காலவரையறை இருக்க வேண்டும் என துணை முதல்-மந்திரி அஜித்பவார் கூறினார்.
Related Tags :
Next Story