மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 16,682 பேர் விண்ணப்பம்


மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 16,682 பேர் விண்ணப்பம்
x
தினத்தந்தி 14 Dec 2020 8:54 AM IST (Updated: 14 Dec 2020 8:54 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 16,682 பேர் விண்ணப்பம் செய்து உள்ளனர்.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டத்தில் 1.1.2021 அன்று 18 வயது பூர்த்தியாகும் நபர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் இதுவரை பெயர் பதிவு செய்து கொள்ளாதவர்கள் தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து கொள்வதற்கு ஏதுவாக, சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கான சிறப்பு முகாம் நேற்று முன்தினம் மாவட்டத்தில் உள்ள 661 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்றது. தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் இந்த சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் திருத்தம் மற்றும் இடமாற்றம் செய்ய வலியுறுத்தி ஏராளமான பொதுமக்கள் விண்ணப்ப படிவங்களை வழங்கினர்.

பெயர் சேர்க்க 16,682 பேர் விண்ணப்பம்

இந்த சிறப்பு முகாமில் மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 16,682 பேரும், நீக்கம் செய்ய 5,167 பேரும், திருத்தம் செய்ய 4,172 பேரும், இடமாற்றம் செய்ய 2,941 பேரும் என மொத்தம் 28 ஆயிரத்து 962 பேர் விண்ணப்பம் கொடுத்து இருப்பதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த மாதம் நடைபெற்ற சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 17,626 பேர் விண்ணப்பம் கொடுத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story