வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம்: 44,786 விண்ணப்பங்கள் குவிந்தன


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம்: 44,786 விண்ணப்பங்கள் குவிந்தன
x
தினத்தந்தி 14 Dec 2020 9:31 AM IST (Updated: 14 Dec 2020 9:31 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர், மாவட்டத்தில் வாக்குசாவடி மையங்களில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 44,786பேர் விண்ணப்பித்துள்ளனர்.

திருப்பூர், 

திருப்பூர் மாவட்டத்தில் தெற்கு, பல்லடம் உள்ளிட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக, வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமினை மாவட்ட வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் மேற்பார்வையாளர் கருணாகரன் ஆய்வு செய்தார்.

திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவினாசி, காங்கேயம், தாராபுரம், உடுமலை மற்றும் மடத்துக்குளம் ஆகிய 8 சட்ட சபை தொகுதிகளுக்குரிய வரைவு வாக்காளர் பட்டியல்கள் கடந்த 16-ந் தேதி வெளியிடப்பட்டது.

விண்ணப்பங்கள்

இந்த 8 தொகுதிகளில் 2,493 வாக்குச்சாவடிகளை உள்ளடக்கிய 1,043 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தம் செய்ய விரும்புவோர், பெயர் நீக்கம் செய்யவிரும்புவோர் மற்றும் ஒரே தொகுதிக்குள் குடியிருப்பு மாறியவர்கள், முகவரி மாற்றம் செய்வது போன்ற கோரிக்கைகள் தொடர்பாக சிறப்பு முகாம் கடந்த 2 நாட்களாக நடந்தது. இதில் 44, 786 விண்ணப்பங்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது.

Next Story