அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த மோட்டார் சைக்கிள்கள்- மாட்டு வண்டி பறிமுதல் 3 பேருக்கு வலைவீச்சு


அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த மோட்டார் சைக்கிள்கள்- மாட்டு வண்டி பறிமுதல் 3 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 14 Dec 2020 10:09 AM IST (Updated: 14 Dec 2020 10:09 AM IST)
t-max-icont-min-icon

அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

கபிஸ்தலம், 

சுவாமிமலை கிராம நிர்வாக அலுவலர் திவ்யபிரியா, பாபுராஜபுரம் கிராம நிர்வாக அலுவலர் அருண்குமார், ஆகியோர் சுவாமிமலை மற்றும் பாபுராஜபுரம் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சுவாமிமலையில் காவிரி ஆற்றில் இருந்து மோட்டார் சைக்கிள்களில் அதே பகுதியை சேர்ந்த செந்தில் மற்றும் மதிவாணன் ஆகிய இருவரும் மணல் மூட்டைகளை ஏற்றி வந்தனர். அவர்களை வழிமறித்த போது அவர்கள் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர். இதைப்போல பாபுராஜபுரம் பகுதியில் காவிரி ஆற்றில் இருந்து அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் அள்ளி வந்த மணி என்பவரை வழிமறித்த போது அவர் மாட்டு வண்டியை நிறுத்தி விட்டு தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.

பறிமுதல்

2 மோட்டார் சைக்கிள் மற்றும் மாட்டு வண்டி ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து சுவாமிமலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து சுவாமிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவர்களை தேடி வருகிறார்கள். 

Next Story