ஒரத்தநாடு அருகே கருவறைக்கு வெளியே கிடந்த பிள்ளையார் சிலை போலீசார் விசாரணை
ஒரத்தநாடு அருகே கோவில் கருவறையில் இருந்த பிள்ளையார் சிலை கோவிலுக்கு வெளியே கிடந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஒரத்தநாடு,
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வெட்டிக்காடு ஆற்றுப் பாலம் பகுதியில் பழமையான பிள்ளையார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நேற்று முன்தினம் ஒரு பெண் சென்றார்.
அப்போது கோவில் கருவறையில் இருந்த பிள்ளையார் சிலையை காணவில்லை. மாறாக பிள்ளையார் சிலை கோவிலுக்கு வெளியே கிடந்தது.இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் அக்கம்பக்கத்தை சேர்ந்தவர்களிடம் தெரிவித்தார்.
போலீசார் விசாரணை
இதுபற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஒரத்தநாடு போலீசார், உடனடியாக வெளியே கிடந்த பிள்ளையார் சிலையை எடுத்து கோவில் கருவறையில் வைக்க நடவடிக்கை எடுத்தனர். பிள்ளையார் சிலையை கருவறையில் இருந்து அப்புறப்படுத்தி வெளியே தூக்கி வைத்த ஆசாமி யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story