மது குடிப்பதை கண்டித்ததால் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை போலீசார் விசாரணை


மது குடிப்பதை கண்டித்ததால் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 14 Dec 2020 11:56 AM IST (Updated: 14 Dec 2020 11:56 AM IST)
t-max-icont-min-icon

மது குடிப்பதை கண்டித்ததால் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வலங்கைமான், 

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி கோவில்பத்து தெருவை சேர்ந்தவர் தயாநிதி (வயது29). இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது தயாநிதியை மது குடிப்பதை நிறுத்த வேண்டும் என்று மனைவி கண்டித்துள்ளார்.

விஷம் குடித்து தற்கொலை

இதனால் மனமுடைந்த தயாநிதி வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சிமருந்தை (விஷம்) குடித்துள்ளார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்். அங்கு சிகிச்சை பலனின்றி தயாநிதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story