பள்ளி காவலாளி இறப்பு பற்றி தெரிவிக்காத தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல்
பள்ளி காவலாளி இறப்பு பற்றி தெரிவிக்காத தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
திருச்சி,
திருச்சி ே்சாமரசம்பேட்டை அருகே உள்ள ஆளவந்தநல்லூரை சேர்ந்தவர் அங்கமுத்து (வயது 68). இவர், தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள பள்ளியில் இரவு காவல் பணியில் இருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்து இறந்து விட்டதாக கூறப்படுகிறது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் திடீரென அங்கமுத்துவின் உறவினர்கள் மற்றும் அவரது ஊரை சேர்ந்தவர்கள் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை வாசலில் அமர்ந்து மறியல் போராட்டத்தில ஈடுபட்டனர். அங்கமுத்துவின் சாவில் மர்மம் உள்ளதாகவும், அவரது இறப்பு பற்றி உடனடியாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்காத செக்யூரிட்டி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரியும் இந்த மறியல் ே்்்பாராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
உறையூர் ே்பாலீசார் அங்கு வந்து போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதனைத்தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் அவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story