ஊரடங்கு தளர்வுக்கு பிறகு குறைந்த அளவிலேயே வேளாங்கண்ணி கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் வருகை


ஊரடங்கு தளர்வுக்கு பிறகு குறைந்த அளவிலேயே வேளாங்கண்ணி கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் வருகை
x
தினத்தந்தி 15 Dec 2020 4:09 AM GMT (Updated: 15 Dec 2020 4:09 AM GMT)

ஊரடங்கு தளர்வுக்கு பிறகு குறைந்த அளவிலேயே வேளாங்கண்ணி கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் வந்தனர்.

வேளாங்கண்ணி,

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம்் மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் இந்த பேராலயம் திகழ்கிறது. இவ்வாறு பல்வேறு சிறப்பு பெற்ற இந்த ஆலயத்திற்கு தமிழகம் மட்டுமின்றி உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர்.

கடற்கரைக்கு செல்ல அனுமதி

கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலா தலங்கள், கடற்கரைக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு நேற்று கடற்கரைக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து நேற்று பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூட்டம் வேளாங்கண்ணி கடற்கரையில் குறைவாகவே காணப்பட்டது. அவ்வாறு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக மொட்டை அடித்து கடலில் குளித்து மகிழ்கின்றனர்.

Next Story
  • chat