தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிடக்கோரி திருவாரூரில், மனித சங்கிலி போராட்டம்


தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிடக்கோரி திருவாரூரில், மனித சங்கிலி போராட்டம்
x
தினத்தந்தி 16 Dec 2020 4:28 AM GMT (Updated: 2020-12-16T09:58:01+05:30)

தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிடக்கோரி திருவாரூரில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

திருவாரூர், 

தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வழங்க பரிந்துரை செய்த முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்தும், தேவேந்திர குல வேளாளர் என அரசாணையை மத்திய அரசு வெளியிட வேண்டும். பட்டியலை விட்டு வெளியேற்றி வேளாண் மரபினர் என அழைத்திட மத்திய- மாநில அரசை வலியுறுத்தி தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருவாரூரில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

கோஷம் எழுப்பினர்

அதன்படி திருவாரூர் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர்கள் ஆரோக்கியராஜ் (வடக்கு) , ரஜினிபாண்டியன் (தெற்கு) ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட தலைவர் பாவா (வடக்கு) , ரஞ்சித் பாண்டியன் (தெற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல செயலாளர் பட்டாபிராமன் பேசினார். போராட்டத்தில் நகர செயலாளர் வெற்றிவேல் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 

Next Story