பேரளத்தில் வ.உ.சி.பேரவையினர் சாலை மறியல் 100-க்கும் மேற்பட்டோர் கைது
பேரளத்தில் மறியலில் ஈடுபட்ட வ.உ.சி. பேரவையினர் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
நன்னிலம்,
வேளாளர், வெள்ளாளர் போன்ற சமூகத்தின் பெயரை பட்டியலின மக்களுக்கு கொடுக்க பரிந்துரை செய்த தமிழக அரசை கண்டித்தும் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும் வ. உ.சி. பேரவை, வ.உ.சி. நல பேரவை, வெள்ளாளர் சங்கம் போன்ற அமைப்பை சேர்ந்தவர்கள் பேரளத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு வ.உ.சி நல பேரவை மாநில துணைத் தலைவர் அமுதன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வ. உ.சி நல பேரவை மாவட்ட இளைஞரணி செயலாளர் சந்தோஷ், மண்டல இணை தலைவர் வீரகணேஷ், வ.உ.சி. மக்கள் இயக்க மாநில் தலைவர் சிங்காரவேல,் வெள்ளாளர் முன்னேற்றக்கழக இளைஞரணி தலைவர் ராஜா ஆகியோர் முன்னிைல வகித்தனர்.
கைது
தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரளம் ெரயில்வே கேட்டில் இருந்து ஊர்வலமாக வந்து பேரளம் பஸ் நிறுத்தம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர.் அப்போது அவர்கள் தமிழக அரசை கண்டித்தும், பட்டியலின மக்களுக்கு வேளாளர் பெயரை கொடுப்பதை ரத்து செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.
இதனால் சுமார் 30 நிமிடம் திருவாரூர்- மயிலாடுதுறை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
Related Tags :
Next Story