வனவிலங்கு-பறவைகள் சரணாலயங்கள் அடுத்த வாரம் திறக்கப்படும் தஞ்சை சரக வனப்பாதுகாவலா் ராமசுப்பிரமணியன் தகவல்
ேகாடியக்கரை வனவிலங்கு-பறவைகள் சரணாலயங்கள் அடுத்தவாரம் திறக்கப்படும் என தஞ்சை சரக வனப்பாதுகாவலா் ராமசுப்பிரமணியன் ெதாிவித்துள்ளார்.
வேதாரண்யம்,
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் வனவிலங்குகள் சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயம் 24 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.
இந்த பசுமை மாறா காட்டில் மான், குதிரை, நரி, குரங்கு, பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இதன் எதிர்புறம் பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்த பறவைகள் சரணாலயத்திற்கு செங்கால் நாரை, பூநாரை, உள்ளான், கூழைக்கிடா, கடல்காகம் உள்ளிட்ட 247 வகையான பறவைகள் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை ஆண்டுதோறும் இங்கு வந்து செல்கின்றன.
வனப்பாதுகாவலா் ஆய்வு
இந்த நிலையில் வனவிலங்குகள் சரணாலயம், பறவைகள் சரணாலயம் கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளது.இதனால் வனவிலங்கு சரணாலயத்தில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனா்.இந்த நிலையில் தஞ்சை சரக வனப்பாதுகாவலர் ராமசுப்பிரமணியன் ேகாடியக்கரைக்கு ேநற்று வந்து வனவிலங்குகள் மற்றும் பறவைகள் சரணாலயங்களை பார்வையிட்டு ஆய்வு ெசய்தார்.
அப்ேபாது அவா் கூறியதாவது:-
அடுத்த வாரம் திறக்க ஏற்பாடு
பரந்து விரிந்த இந்த காடு சுற்றுலா பயணிகள் நெருக்கடி இல்லாமல் ெசல்லும் வகையில் அமைந்துள்ளது. அரசு உயா் அதிகாாிகளுடன் ஆலோசனை நடத்தி இந்த சரணாலயங்களை சுற்றுலா பயணிகள் பார்வையிட அடுத்த வாரம் திறக்க ஏற்பாடு ெசய்யப்படும். தற்ேபாது சரணாலயத்திற்கு ெசங்கால் நாரை உள்ளிட்ட பறவைகள் அதிக அளவில் வந்துள்ளன. இவ்வாறு அவா் கூறினார். இந்த ஆய்வின்போது வனச்சரகர்கள் குணசேகரன், அயூப் கான், வனவர் சதீஸ் குமார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனா்.
Related Tags :
Next Story