புதுச்சேரியில் இன்று 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
புதுச்சேரியில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 37,582 ஆக அதிகரித்துள்ளது.
புதுச்சேரி,
புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அங்கு இன்று 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 37,582 ஆக அதிகரித்துள்ளது.
புதுச்சேரியில் இன்று ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இதனால் அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 622 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 36,661 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், தற்போது மருத்துவமனைகளில் 299 பேர் சிகிச்சை பெற்று வருவதாக புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story