விலையில்லா, இணைப்பு சக்கரங்கள் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர்-தையல் எந்திரம் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்
விலையில்லா, இணைப்பு சக்கரங்கள் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர்-தையல் எந்திரம் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்.
பெரம்பலூர்,
தமிழக அரசால் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 2 கால்கள் பாதிக்கப்பட்டு நல்ல நிலையில் கைகள் உள்ள மாற்றுத்திறனாளிக்கு விலையில்லா, இணைப்பு சக்கரங்கள் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்படுகிறது. அதனை பெற 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் வருகிற 21-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு இதுவரை அரசு துறைகளில் இணைப்பு சக்கரங்கள் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் பெறாதவராக இருக்க வேண்டும்.
இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், காது கேளாத மற்றும் வாய் பேசாதவர்கள் விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் எந்திரம் பெற 18 வயது முதல் 45 வயது வரையுள்ள இருபாலரும் நாளைக்குள்(வெள்ளிக்கிழமை) விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகள் அரசு மற்றும் தனியார் தையல் பயிற்சி மையங்களில் தையல் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இதுவரை அரசு துறைகளில் தையல் எந்திரம் பெறாதவராக இருக்க வேண்டும். தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், கல்வி சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-4 ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், பெரம்பலூர் என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04328-225474 என்ற அலுவலக தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவல் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story