குளித்தலையில் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தினர் சாலை மறியல்


குளித்தலையில் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 17 Dec 2020 6:38 AM IST (Updated: 17 Dec 2020 6:38 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் வக்கீலுக்கு அரிவாள் வெட்டு: குளித்தலையில் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தினர் சாலை மறியல்.

குளித்தலை, 

திருச்சி மாவட்டம் அல்லித்துறை பகுதியை சேர்ந்தவர் வக்கீல் சந்தர். இவர் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் மாநில அமைப்பாளராக உள்ளார். இவரை நேற்று முன்தினம் திருச்சி பகுதியில் 4 பேர் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்று விட்டனர். இந்தநிலையில் சந்தரை வெட்டியவர்கள் மற்றும் இதில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, இச்சங்கத்தைச் சேர்ந்த பலர் குளித்தலை சுங்க கேட் பகுதியில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த குளித்தலை போலீசார் அவர்களிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் குளித்தலை போலீஸ் நிலையத்தில் சந்தர் வெட்டப்பட்டது தொடர்பாக வழக்கு பதிய வேண்டும் என மறியலில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இதற்கு போலீசார் ஒப்புதல் அளித்ததை அடுத்து சாலை மறியலை கைவிட்டு அனைவரும் காத்து நின்றனர். இதையடுத்து நிர்வாகி ஒருவர் அளித்த புகாரை போலீசார் பெற்றுக் கொண்டனர். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்தநிலையில் தடையை மீறி மறியல் போராட்டம் நடத்தியதாக மறியலில் ஈடுபட்டவர்கள் மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story