சுங்குவார்சத்திரம் அருகே, வீடு புகுந்து துணிகரம்; சென்னை பல்கலைக்கழக பதிவாளரை மிரட்டி 30 பவுன் நகை கொள்ளை
சுங்குவார்சத்திரம் அருகே வீடு புகுந்து சென்னை பல்கலைக்கழக பதிவாளரை மிரட்டி 30 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
பல்கலைக்கழக பதிவாளர்
காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த பிச்சிவாக்கம், தடுமார்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவர் சென்னை பல்கலைக் கழகத்தில் பதிவாளராக வேலை செய்கிறார்.
நேற்று முன்தினம் இரவு இவர் தன்னுடைய குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.
அப்போது மர்ம நபர்கள் சிலர் ஏணி போட்டு ஏறி வீட்டின் மாடிக்கு சென்று வீட்டுக்குள் புகுந்தனர். சத்தம் கேட்டு சண்முகம் மற்றும் அவரது குடும்பத்தினர் கண் விழித்தனர்.
30 பவுன் நகை கொள்ளை
மர்ம நபர்கள் கத்தி முனையில் சண்முகம் மற்றும் அவரது குடும்பத்தினரை மிரட்டி வீட்டின் கழிவறையில் தள்ளி பூட்டினர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த 30 பவுன் தங்க நகை மற்றும்
வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து சண்முகம் சுங்குவார்சத்திரம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்.
Related Tags :
Next Story