திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு துரை ஆய்வு


திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு துரை ஆய்வு
x
தினத்தந்தி 17 Dec 2020 7:56 AM IST (Updated: 17 Dec 2020 7:56 AM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு துைர ஆய்வு செய்தார்.

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையம் மற்றும் கோட்டூர், ஆலிவலம் போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட

வழக்குகள் தொடர்பான ஆய்வு திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை தலைமையில் நடைபெற்றது. ஆய்வின் போது இந்த வருடத்தில் எந்தெந்த போலீஸ் நிலையங்களில் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன எத்தனை வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளன. எத்தனை வழக்குகள் முடிக்கப்படாமல் உள்ளன. இதில் எவ்வளவு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன? எத்தனை போக்குவரத்து வழக்குகள் உள்ளன என பார்வையிட்டார்.

கூடுதல் போலீசார்

அப்போது நிருபர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு துரை, திருத்துறைப்பூண்டியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கூடுதல் போலீசார் நியமிக்கப்படுவார்கள் என கூறினார்.

ஆய்வின் போது திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி, இன்ஸ்பெக்டர் மகாதேவன், சப்- இன்ஸ்பெக்டர் தேவதாஸ் கோட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்அறிவழகன், ஆலிவலம் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

ஆய்வின் போது போலீஸ் சூப்பிரண்டு சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.

Next Story