டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் ரெயில் மறியல் செய்த 142 பேர் கைது


டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் ரெயில் மறியல் செய்த 142 பேர் கைது
x
தினத்தந்தி 18 Dec 2020 7:34 AM IST (Updated: 18 Dec 2020 7:34 AM IST)
t-max-icont-min-icon

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும் திருச்சி மாவட்ட த.மு.மு.க. மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினர் நேற்று மாலை ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மலைக்கோட்டை, 

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும் திருச்சி மாவட்ட த.மு.மு.க. மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினர் நேற்று மாலை ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக மாவட்ட தலைவர் உதுமான் அலி தலைமையில் திருச்சி கோட்டை ெரயில் நிலையத்துக்குள் அக்கட்சியினர் திடீரென திரண்டு வந்து தண்டவாளத்தில் அமர்ந்தனர். அப்போது அங்கு வந்த, மயிலாடுதுறையில் இருந்து கோவை செல்லும் ஜனசதாப்தி ரெயிலை அவர்கள் மறித்து கோஷங்களை எழுப்பினார்கள். இதுபற்றி தகவல் அறிந்த கோட்டை போலீசார், அங்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட 142 பேரை கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதைத்தொடர்ந்து அந்த ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. கைது செய்து, கோட்டை பகுதியில் உள்ள 2 திருமண மண்டபங்களில் 142 பேரை தங்க வைத்தனர்.

Next Story