ஆண்டிமடத்தில் கணவர் இறந்த சோகத்தில் மனைவியும் சாவு சாவிலும் இணை பிரியாத தம்பதி


ஆண்டிமடத்தில் கணவர் இறந்த சோகத்தில் மனைவியும் சாவு சாவிலும் இணை பிரியாத தம்பதி
x
தினத்தந்தி 21 Dec 2020 4:26 AM IST (Updated: 21 Dec 2020 4:26 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிமடத்தில் கணவர் இறந்த சோகத்தில் மனைவியும் இறந்தார்.

ஆண்டிமடம்,

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியை சேர்ந்தவர் மருதநாயகம் (வயது 79). இவரது மனைவி அனஸ்தாஸி(77). இவர்கள் 2 பேரும் ஆசிரியர்களாக பணியாற்றி, ஓய்வு பெற்று வீட்டில் இருந்து வந்தனர். இவர்களுக்கு 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

முதுமையின் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு மருதநாயகம் நோய் வாய்ப்பட்டு மருத்துவ சிகிச்சை ெபற்றார். அவர் படுக்கையில் இருப்பதை கண்டு வருத்தமடைந்த அனஸ்தாஸிக்கும் உடல்நல குறைவு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.

சாவு

இந்நிலையில் நேற்று மதியம் மருதநாயகம் உயிரிழந்தார். அவருடைய உடலை கண்டு அழுத நிலையில் அனஸ்தாஸி சோகத்துடன் இருந்தார். பின்னர் அனஸ்தாஸியும் உயிரிழந்தார். இதையடுத்து அவர்களுடைய உடலை இன்று(திங்கட்கிழமை) அடக்கம் செய்தவதற்கான ஏற்பாடுகளை உறவினர்கள் மேற்கொண்டனர்.

இதில் கல்லறை தோட்டத்தில் அருகருகே உள்ள சமாதியில் அவர்களுடைய உடல் அடக்கம் ெசய்யப்பட உள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். சாவிலும் இணை பிரியாமல், கணவர் இறந்த சில மணி நேரத்திலேயே மனைவியும் இறந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story