சென்னையில் உள்ள மீன் மற்றும் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
சென்னை,
இந்துக்களில் பெரும்பான்மையானோர் புரட்டாசி மாதம் அசைவ உணவை தவிர்த்து சைவ உணவை மட்டும் உண்டு விரதம் இருப்பது வழக்கம். இதேபோன்று, கார்த்திகை மாதமும் பெரும்பாலான இந்துக்கள் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்வதற்காக மாலை அணிந்து விரதம் இருப்பார்கள். ஆனால் அங்கு குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டு அனுமதிக்கப்படுவதால் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் மாலை அணிவதை தவிர்த்துள்ளனர். எனினும் கார்த்திகை மாதம் முழுவதும் அவர்கள் அசைவ உணவை தவிர்த்து வந்தனர்.
தற்போது, கார்த்திகை மாதம் முடிவடைந்து, மார்கழி மாதம் பிறந்து முதல் ஞாயிற்றுக் கிழமை என்பதால், நேற்று சென்னையில் உள்ள மீன் மற்றும் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அந்த வகையில் சென்னை பட்டினப்பாக்கம், காசிமேடு, சிந்தாதிரிப்பேட்டை போன்ற மீன் மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பட்டினப்பாக்கத்தில், விற்கப்பட்ட மீன்களின் விலை (கிலோவுக்கு) வருமாறு:-
2015-ம் ஆண்டு வெள்ளம் மீண்டும் ஏற்படாமல் தடுக்க, சென்னையில் தேவையான முன்னேற்பாடுகளை அ.தி.மு.க. அரசு செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.