அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்
உத்திரமேரூர் பேரூராட்சி 18 வார்டுகளை சேர்ந்த அ.தி.மு.க. மகளிர் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் உத்திரமேரூரில் நடைபெற்றது.
உத்திரமேரூர்,
கூட்டத்திற்கு காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க. செய்தி தொடர்பாளரும் முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திரா கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார். கூட்டத்தில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பிரகாஷ் பாபு, தங்க பஞ்சாட்சரம், கே.ஆர் தர்மன், இளைஞர் அணி பொருளாளர் ஜெயவிஷ்ணு, நகர இளைஞரணி செயலாளர் துரை பாபு, நகர செயலாளர் லட்சுமணன், கூட்டுறவு பண்டகசாலை தலைவர் என்.எஸ். மணி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மாற்று கட்சியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
Related Tags :
Next Story