கடந்த ஆண்டு நஷ்டம் காரணமாக நீடாமங்கலம் பகுதியில் கரும்பு சாகுபடி குறைந்தது
கடந்த ஆண்டு ஏற்பட்ட நஷ்டம் காரணமாக நீடாமங்கலம் பகுதியில் கரும்பு சாகுபடி குைறந்து உள்ளது.
நீடாமங்கலம்,
பொங்கல் என்றாலே செங்கரும்புதான் அனைவரின் ஞாபகத்துக்கும் வரும். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியில் ஆதனூர், பூவாநத்தம், பெரியக்கோட்டை, கோவில்வெண்ணி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் கடந்த ஆண்டு அதிக அளவு செங்கரும்பு சாகுபடி செய்திருந்தனர். கடந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு ஒரு வாரத்துக்கு முன்பு 10 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு கரும்பு ரூ.300-ல் இருந்து ரூ.400 வரை நீடாமங்கலத்தில் விற்பனையானது. பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் இரவு படிப்படியாக விலை குறைந்து ரூ.10- க்கு ஒரு கட்டு கரும்பு விற்பனையானது. பிறகு கரும்பை வாங்க ஆள் இல்லாத நிலையில் ஏராளமான கரும்புகள் தேக்கமடைந்து சாலைகளில் கிடந்தது.
புயல்
.இதனால் இந்த வருடம் ஆதனூர், புவாநத்தம், பெரியக்கோட்டை, கோவில்வெண்ணி பகுதிகளில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பாதிப்பால் விவசாயிகள் 5 ஏக்கருக்கு குறைவாகவே செங்கரும்பு சாகுபடி செய்துள்ளனர்.
இது குறித்து கரும்பு சாகுபடி செய்த விவசாயிகள் கூறியதாவது:-
கடந்த ஆண்டு 200 குழி கரும்பு சாகுபடி செய்து நஷ்டம் ஏற்பட்டதால் இந்த ஆண்டு 100 குழி கரும்பு மட்டுமே சாகுபடி செய்துள்ளேன். நிவர், புரெவி புயல் காரணமாக பெய்த மழையில் கரும்பு கொல்லையில் மழை நீர் புகுந்து கரும்புகள் சாய்ந்து விட்டன. இதனால் ஆட்களை வைத்து கரும்புகளை நிமிர்த்து கட்டி வைத்துள்ளேன்.
நஷ்டம்
இந்த ஆண்டு கரும்புகள் குறைவாகவே உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு கட்டு ரூ.300 லிருந்து ரூ.400 வரை விற்றால் ஓரளவு லாபம் கிடைக்கும். வெளியூர்களில் இருந்து மொத்த வியாபாரிகள் கொண்டு வந்து விற்கும் கரும்பால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆண்டு கரும்பு சாகுபடி குறைவாக உள்ளதால் அதிக விலைக்கு விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Tags :
Next Story