நாமக்கல் மாவட்டத்தில் மருந்தாளுனர் உள்பட 29 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் மருந்தாளுனர் உள்பட 29 பேருக்கு ெகாரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
நாமக்கல்,
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 10 ஆயிரத்து 968 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் பிற மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்த 2 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது.
இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்து 970 ஆக உயர்ந்தது. இதற்கிடையே நேற்று ஒரே நாளில் குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரி மருந்தாளுனர் உள்பட 29 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 999 ஆக உயர்ந்துள்ளது.
218 பேருக்கு சிகிச்சை
இவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 33 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்.
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 10 ஆயிரத்து 675 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 106 பேர் பலியான நிலையில் 218 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Tags :
Next Story