பெரம்பலூரில் 4 நாட்களுக்கு பின்னர் மீண்டும் ஒருவருக்கு கொரோனா அரியலூரில் 3 பேர் பாதிப்பு


பெரம்பலூரில் 4 நாட்களுக்கு பின்னர் மீண்டும் ஒருவருக்கு கொரோனா அரியலூரில் 3 பேர் பாதிப்பு
x

பெரம்பலூர் மாவட்டத்தில் 4 நாட்களுக்கு பின்னர் மீண்டும் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அரியலூரில் 3 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 2,253 பேர் கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகி இருந்தனர். இவர்களில், குணம் அடைந்த 2 ஆயிரத்து 230 பேர் வெவ்வேறு தேதிகளில் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

மீதமுள்ள 2 பேர் பெரம்பலூர் மற்றும் நாமக்கல் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று முன்தினம் வரை தொடர்ந்து 4 நாட்களாக பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று ஒருவருக்கு கொேரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2254 ஆக உயர்ந்துள்ளது.

3 பேர் பாதிப்பு

இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் நேற்று அரியலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் ஒருவர், தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் ஒருவர், ஜெயங்கொண்டம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒருவர் என மொத்தம் 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,622 ஆக உயர்ந்துள்ளது. இதில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணமடைந்த 4,539 பேர் வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பலனின்றி இதுவரை 48 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மொத்தம் 414 பேருக்கு ெகாரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Next Story