மழையால் நெற்பயிர்கள் பாதிப்பு: ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


மழையால் நெற்பயிர்கள் பாதிப்பு: ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Dec 2020 6:54 AM IST (Updated: 23 Dec 2020 6:54 AM IST)
t-max-icont-min-icon

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முத்துப்பேட்டை,

சமீபத்தில் நிவர் புயல் மற்றும் புரெவி புயலையொட்டி தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதனால் ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகம் முன்பு நேற்று அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

எம்.பி.-எம்.எல்.ஏ. பங்கேற்பு

ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் முருகையன் தலைமை தாங்கினார். நாகை செல்வராஜ் எம்.பி., திருத்துறைப்பூண்டி ஆடலரசன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

தி.மு.க. ஒன்றிய செயலாளர் மனோகரன், கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட துணைச்செயலாளர் சந்திரசேகர ஆசாத், தென்னை விவசாயிகள் சங்க மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி, அ.ம.மு.க. மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஜெகன், விவசாய சங்க தலைவர் யோகநாதன், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் தெட்சிணாமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் பின்னத்தூர் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். முன்னதாக கோவிலூர் ரவுண்டானாவில் இருந்து விவசாயிகள் ஊர்வலமாக வேளாண்மை அலுவலகம் வந்தனர்.

Next Story