கனமழையால் பயிர்கள் அழுகின: வயலிலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கோட்டூர் அருகே கனமழையால் அழுகிய பயிர்களை அதிகாரிகள் பார்வையிடக்கோரி விவசாயிகள் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோட்டூர்,
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே குலமாணிக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் மழை நீரில் மூழ்கி சுமார் 150 ஏக்கர் நெற்பயிர்கள் அழுகின. குலமாணிக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணுக்குடி, குலமாணிக்கம், ராமநாதபுரம், உள்ளிட்ட கிராமங்களில் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகியதால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர். இதனால் அவர்கள் அழுகிய பயிர்களுடன் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்களை வேளாண்மைத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு உரிய நிவாரணம் வேண்டும், கடந்த ஆண்டு உழுந்து பயிர் பாதிப்புக்கான நிவாரணத்தை வழங்க வேண்டும்,
நிவாரணம்
மழையால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கோஷம் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story