குத்தாலம் ஒன்றியத்தில், விதிகளை மீறி நடைபெறும் திட்ட பணிகளுக்கு தடை விதிக்க ஊராட்சி தலைவர்கள் கோரிக்கை
குத்தாலம் ஒன்றியத்தில் விதிகளை மீறி நடைபெறும் திட்ட பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என ஊராட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம்,
மயிலாடுதுறை அருகே உள்ள குத்தாலம் ஒன்றியத்தில் 51 ஊராட்சிகள் உள்ளது. இந்த ஊராட்சிகளை சேர்ந்த 27 ஊராட்சி மன்ற தலைவர்கள் குத்தாலம் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பை உருவாக்கி உள்ளனர்.
இவர்கள் நேற்று நாகை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு இருந்த கூடுதல் கலெக்டர் பிரசாந்திடம் புகார் மனு அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது:-
திட்ட பணிகள்
குத்தாலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்ட நிதியில் இருந்து நிறைவேற்றப்படும் சாலை அமைத்தல், சிறுபாலங்கள் கட்டுதல், பள்ளி சுற்றுசுவர் அமைத்தல், ஊராட்சி மன்ற அலுவலகங்கள் கட்டுதல் உள்ளிட்ட வளர்ச்சி திட்டப் பணிகளை ஊராட்சி மன்ற தலைவரின் அனுமதியில்லாமல் பஞ்சாயத்து சட்ட விதிகள் மற்றும் கலெக்டரின் உத்தரவுகளுக்கு புறம்பாக அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
அதிகாரிகளின் இதுபோன்ற நடவடிக்கைக்கு இடைக்கால தடை ஆணை பிறப்பிக்க கோரி குத்தாலம் ஊராட்சி ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பின் சார்பில் மயிலாடுதுறை கோர்ட்டில் கடந்த 22-ந் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தடை விதிக்க வேண்டும்
இந்த மனு மீதான விசாரணை அடுத்த மாதம் (ஜனவரி) 23-ந் தேதி நடைபெற உள்ளது. எனவே கோர்ட்டு நடவடிக்கைகள் முடியும் வரை திட்ட பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story