பாளையங்கோட்டை மண்டல அலுவலகத்தில் பா.ம.க.வினர் முற்றுகை போராட்டம்


பாளையங்கோட்டை மண்டல அலுவலகத்தில் பா.ம.க.வினர் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 24 Dec 2020 9:22 AM IST (Updated: 24 Dec 2020 9:22 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி வருகிறார்.

நெல்லை,

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி வருகிறார். இந்த கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் நேற்று முற்றுகை போராட்டம் நடந்தது. நெல்லை மாநகர மாவட்ட பா.ம.க. சார்பில் நெல்லை மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டல அலுவலகத்தில் நேற்று முற்றுகை போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சியோன் தங்கராஜ் தலைமை தாங்கினார். அப்போது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தில் மாநில துணை செயலாளர் அன்பழகன், மாநில இளைஞரணி துணைத்தலைவர் அந்தோணிராஜ், மாநகர தலைவர் எட்வின் நம்முடையார், கட்சி நிர்வாகிகள் ஜீசஸ் ஜான், ஹரிஹரன், மணி யாதவ், மகாராஜன் கருப்பசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.



Next Story