பரமத்திவேலூர், பள்ளிபாளையம், மல்லசமுத்திரம் பகுதி பேரூராட்சி அலுவலகங்களில் பா.ம.க.வினர் மனு கொடுக்கும் போராட்டம்


பரமத்திவேலூர், பள்ளிபாளையம், மல்லசமுத்திரம் பகுதி பேரூராட்சி அலுவலகங்களில் பா.ம.க.வினர் மனு கொடுக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 24 Dec 2020 11:59 AM IST (Updated: 24 Dec 2020 11:59 AM IST)
t-max-icont-min-icon

பரமத்திவேலூர், பள்ளிபாளையம், மல்லசமுத்திரம் பகுதி பேரூராட்சி அலுவலகங்களில் பா.ம.க.வினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பரமத்திவேலூர்,

பரமத்திவேலூர் தாலுகா மற்றும் மோகனூர் தாலுகாவில் உள்ள பேரூராட்சி அலுவலகங்கள் முன்பு பா.ம.க சார்பில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி நாமக்கல் மேற்கு மாவட்ட பா.ம.க. சார்பில் பரமத்திவேலூர் தாலுகாவில் உள்ள வேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, பரமத்தி மற்றும் மோகனூர் ‌பேரூராட்சி அலுவலகங்கள் முன்பு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதனைதொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலர்களிடம்‌ பா.ம.க.வினர் மனு அளித்தனர். இந்த போராட்டத்திற்கு மாநில துணை பொதுச்செயலாளர் பொன்.ரமேஷ் தலைமை தாங்கினார். மோகனூர் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் பிரதாப், மாநில துணை அமைப்பு தலைவர் சுதாகர், மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் சரவணன், மோகனூர் மேற்கு ஒன்றிய தலைவர் சிவக்குமார், பரமத்திவேலூர் ‌நகர செயலாளர்‌ ஜெய்கணேஷ், பா.ம.க. நிர்வாகிகள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளிபாளையம்

பள்ளிபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆலாம்பாளையம் பேரூராட்சியில் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் 20 சதவீத தனி இடஒதுக்கீடு கேட்டு பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு அளித்தனர். முன்னதாக மனு அளிப்பதற்காக பா.ம.க.வினர், வன்னியர் சங்கத்தினர் ஊர்வலமாக வந்தனர். இந்த ஊர்வலத்திற்கு மாநில பா.ம.க. செயற்குழு உறுப்பினர் கணேசன் தலைமை தாங்கினார். இதையடுத்து பேரூராட்சி அலுவலகம் முன்பு இடஒதுக்கீடு கோரி கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர்.

இதில் மாவட்ட விவசாய அணி செயலாளர் சேட்டு, வன்னியர் சங்க மாவட்ட தலைவர் கோபால், நகர செயலாளர் ராஜா, நகரத்தலைவர் ராஜபாண்டியன், ஒன்றிய செயலாளர் மூர்த்தி, ஒன்றியத்தலைவர் ஜெயமுருகன், முன்னாள் மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜேந்திரன், விளையாட்டுக்குழு முருகேசன், தொழிற்சங்கத் தலைவர் ராதாகிருஷ்ணன், பேரூர் முருகன், கட்டிட சங்கத்தை சேர்ந்த கணேசன், நெசவாளர் அணி குமார், சண்முகம், உழவர் பேரியக்க தலைவர் கோவிந்தன், முன்னாள் ஒன்றிய நிர்வாகி குழந்தைவேல், ஆலாம்பாளையம் துணைத்தலைவர் மணி, இளைஞரணி சவுந்தரராஜ் மற்றும் நாகராஜ், அலெக்ஸ் முருகேசன், மணிகண்டன், மடிநாகராஜன், பா.ம.க., வன்னியர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

மல்லசமுத்திரம்

இதேபோல மல்லசமுத்திரம் பேரூராட்சி அலுவலகத்தில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க கோரி மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரூர் பா.ம.க. தலைவர் பாபு முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் செந்தில் கலந்து கொண்டார். பின்னர் பா.ம.க. பேரூராட்சி செயலாளர் சங்கர் தலைமையில் அலுவலகத்தில் இருந்த இளநிலை உதவியாளர் ராஜூவிடம் மனு அளிக்கப்பட்டது. இதில் மேற்கு மாவட்ட துணைத்தலைவர் சரவணன், மாவட்ட இளைஞரணி துணைச்செயலாளர் சங்கர் உள்பட பா.ம.க. கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Next Story