கரூர் நகரப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் உலா வந்து முதியவர் கொரோனா விழிப்புணர்வு


கரூர் நகரப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் உலா வந்து முதியவர் கொரோனா விழிப்புணர்வு
x
தினத்தந்தி 25 Dec 2020 6:55 AM IST (Updated: 25 Dec 2020 6:55 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அவார்னஸ் அப்பா என்று அழைக்கக் கூடிய சிவசுப்ரமணியன் (வயது 61). இவர் கடந்த 2006-ம் ஆண்டு முதல் விழிப்புணர்வு சேவை செய்து வருகிறார்.

கரூர்,

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அவார்னஸ் அப்பா என்று அழைக்கக் கூடிய சிவசுப்ரமணியன் (வயது 61). இவர் கடந்த 2006-ம் ஆண்டு முதல் விழிப்புணர்வு சேவை செய்து வருகிறார். ரத்த தானம், கண் தானம், உடல் தானம், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு, மத்திய, மாநில அரசுகளின் பல திட்டங்களை பொதுமக்களிடம் சென்று சேர்ப்பதற்காக தனது ஆடைகள், இரு சக்கர வாகனத்தில், பைகளில் விழிப்புணர்வு தொடர்பான வாசகங்களை அச்சடித்தும், பதாகைகளாகவும் வைத்துள்ளார். மேலும், செல்லும் இடங்களில் எல்லாம் துண்டு பிரசுரங்களை அச்சிட்டு பொதுமக்களிடம் வழங்கி வருகிறார். கடந்த 16 ஆண்டுகளாக 5 லட்சத்து 20 ஆயிரம் கிலோ மீட்டர் தனது வாகனத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். இந்தநிலையில் கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு, தற்போது ஏற்கனவே உள்ள விழிப்புணர்வுகளுடன் கொரோனா விழிப்புணர்வும் சேர்த்து மாவட்டம், மாவட்டமாக சென்று வருகிறார். கோவை, திருப்பூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களை தொடர்ந்து நேற்று காலை கரூர் பஸ் நிலையம் அருகே் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். மேலும் நகரப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் உலாவந்தார்.

Next Story