வெள்ளமடம் அருகே மகன் இறந்த துக்கத்தில் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை


முருகன்
x
முருகன்

மகன் இறந்த துக்கம் தாங்காமல் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மகன் சாவு
வெள்ளமடம் அருகே கரையான்குழியை சேர்ந்தவர் முருகன் (வயது 44), டிரைவர். இவருடைய மனைவி சுகுணா, இவர்களுக்கு ஆகாஷ் (17), ஜெயப்பிரகாஷ் (14) என 2 மகன்கள் உண்டு.

கடந்த 5 மாதத்திற்கு முன் முருகன் தனது 2-வது மகன் ஜெயபிரகாசுடன் மோட்டார்சைக்கிளில் அருகில் ஓட்டலுக்கு சாப்பாடு வாங்க சென்றார். அப்போது, மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த ஜெயபிரகாஷ் படுகாயமடைந்து இறந்தார். தன் கண் முன்னாலேயே மகன் இறந்த சம்பவம் முருகனை பெரிதும் பாதித்தது.

இதையடுத்து, முருகன் கடந்த சில மாதங்களாக மனம் உடைந்த நிலையிலேயே காணப்பட்டு வந்தார்.

தற்கொலை
இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை முருகன் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவில் முருகன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மகன் இறந்த துக்கம் தாங்காமல் தந்தை விஷம் குடித்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story