கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தர்மபுரி மாவட்ட தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை; கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்பு


தர்மபுரி பேராலயம் சார்பில் மறைமாவட்ட ஆயர் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை
x
தர்மபுரி பேராலயம் சார்பில் மறைமாவட்ட ஆயர் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை
தினத்தந்தி 26 Dec 2020 4:38 AM IST (Updated: 26 Dec 2020 4:38 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்றனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகை
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கிறிஸ்துமஸ் விழா தர்மபுரி மாவட்டத்தில் கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி தர்மபுரி தூய இருதய ஆண்டவர் பேராலயம் சார்பில் பாரதிபுரத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேராலய வளாகத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

இதற்கு தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை குரு அருள்ராஜ், மறைமாவட்ட பொருளாளர் சூசைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை பங்கு தந்தை சிரில்விக்டர் மற்றும் கிறிஸ்தவர்கள பங்கேற்றனர். இந்த பிரார்த்தனை கூட்டத்தின் முடிவில் மறை மாவட்ட ஆயர் கிறிஸ்தவர்களுக்கு அருளாசி வழங்கினார். பிரார்த்தனையை தொடர்ந்து ஒருவருக்கொருவர் கேக்குகளை பரிமாறி கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.

வேப்பமரத்துக்கொட்டாய்
இதேபோன்று தர்மபுரி சி.எஸ்.ஐ. ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நேற்று காலை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. போதகர் பிரபுமோகன் தலைமையில் நடந்த பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

வெண்ணாம்பட்டியை அடுத்த வேப்பமரத்துக்கொட்டாய் ஏ.ஜி. ஆலயத்தில் பாதிரியார் சுந்தர்சிங் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. காந்தி நகரில் உள்ள சியோன் ஜெப ஊழியங்கள் சபையில் பாதிரியார் ஹெட்வின் ராஜ்குமார் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

அரூர்-கோவிலூர்
கோவிலூர் புனித சவேரியார் தேவாலயம், பூலாப்பட்டி, கடத்தூர் தேவாலயம் ஆகிய இடங்களில் பங்குத்தந்தைகள் ஏசுதாஸ், மரியதாஸ், ஜோதி, அருள் ரோசாரியோ ஆகியோர் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. செல்லியம்பட்டி, கேத்தனஅள்ளி, பாலக்கோடு ஆகிய இடங்களில் உள்ள தேவாலயங்களில் பங்குத்தந்தைகள் ஜார்ஜ், ஹென்றிஜார்ஜ், மோசஸ், சவுரியப்பன் ஆகியோர் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

இதேபோன்று அரூரில் உள்ள புனித மரியன்னை தேவாலயத்தில் பங்குத்தந்தை ஜான்பால் தலைமையில் பிரார்த்தனை நடந்தது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

சிறப்பு பிரார்த்தனை
பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம், பி.பள்ளிப்பட்டி, தென்கரைக்கோட்டை ஆகிய இடங்களில் பங்குத்தந்தைகள் அந்தோணிசாமி, ஜான்பீட்டர், போஸ்கோ, கிறிஸ்டோபர், தேவசகாயம் ஆகியோர் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

Next Story