ஓவிய-சிற்ப கண்காட்சியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் கலெக்டர் கோவிந்தராவ் தகவல்


ஓவிய-சிற்ப கண்காட்சியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் கலெக்டர் கோவிந்தராவ் தகவல்
x
தினத்தந்தி 27 Dec 2020 9:45 AM IST (Updated: 27 Dec 2020 9:45 AM IST)
t-max-icont-min-icon

ஓவிய-சிற்ப கண்காட்சியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்தார்.

தஞ்சாவூர்,

தமிழகஅரசின் கலை பண்பாட்டுத்துறையானது நமது நாட்டின் பாரம்பரிய கலைகள், பண்பாடு, கலை பண்புகளை மேம்படுத்தவும், கலைஞர்களின் கலைத்திறனை சிறப்புக்கும் வகையிலும் கலை பயிற்சிகளை அளித்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. ஓவிய, சிற்பக்கலையை வளர்த்திடும் நோக்கில் அக்கலையில் ஈடுபட்டுள்ள கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் ஓவிய-சிற்ப கலைக்காட்சி நடத்த தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மண்டல கலை பண்பாட்டு மையத்திற்குட்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஓவிய படைப்புகளை பெற்று ஓவிய-சிற்ப கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் ஓவியர்கள் தங்களது மரபுவழி மற்றும் நவீன பாணி ஓவியங்கள், தஞ்சை ஓவியங்கள், ஆயில் பெயிண்டிங், வாட்டர் கலர் பெயிண்டிங் படைப்புகள் மற்றும் சிற்பங்களை முறையாக தனிநபர் கண்காட்சியில் வைத்து தங்களது படைப்புகளை சந்தைப்படுத்தும் வகையிலும் நடத்தப்பட உள்ளது.

5-ந் தேதி கடைசிநாள்

ஓவிய கண்காட்சியில் முதல் பரிசாக ரூ.3,500 வீதம் 10 ஓவிய கலைஞர்களுக்கும், 2-ம் பரிசாக ரூ.2,500 வீதம் 10 கலைஞர்களுக்கும், 3-ம் பரிசாக ரூ.1,500 வீதம் 10 கலைஞர்களுக்கும் காசோலையாக வழங்கப்படும். தஞ்சை மாவட்டத்தில் ஆர்வமுள்ள ஓவிய மற்றும் சிற்ப கலைஞர்கள் தங்களது படைப்புகளை கண்காட்சியில் வைத்திட விவர குறிப்பு, படைப்புகளின் எண்ணிக்கை விவரங்களுடன் உதவி இயக்குனர், மண்டல கலை பண்பாட்டு மையம், பழைய கலெக்டர் அலுவலக வளாகம், தஞ்சாவூர்-613001 என்ற முகவரிக்கு அடுத்தமாதம்(ஜனவரி) 5-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story