அருமனை அருகே திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் தற்கொலை போலீஸ் விசாரணை
அருமனை அருகே திருமணமான ஒரு மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அருமனை,
அருமனை அருகே மஞ்சாலுமூடு கைதகம் என்ற இடத்தை சேர்ந்த குட்டி மகன் விஜில் (வயது 33). இவர் அருமனை சந்திப்பில் பேக் செய்யும் கடை நடத்தி வருகிறார். இவருக்கும், நெய்யூர் பகுதியை சேர்ந்த பால் தாஸ் மகள் அனிஷாவுக்கும் கடந்த மாதம் 26-ந்தேதி திருமணம் நடைபெற்றது. இருவரும் கடந்த ஒரு மாதமாக சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் விஜில் மற்றும் அனிஷா ஆகிய இருவரும் கிறிஸ்துமஸ் தினத்தன்று மார்த்தாண்டத்தில் ஆலயத்தில் மின் விளக்கு அலங்காரத்தை பார்க்க சென்றுள்ளனர். அப்போது விஜில் அண்ணன் மற்றும் அவர்் குடும்பத்தினரும் வந்து இருந்தனர். மேலும் கடந்த சில நாட்களாக அனுஷாவுடன் நெருங்கிய தோழி ஒருவரும் வீட்டில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
தற்கொலை
நேற்று மாலை அனுஷாவின் தோழியை அவரது வீட்டுக்கு அனுப்பி வைப்பதற்காக விஜில் அருமனை சந்திப்புக்கு சென்றார்.
இந்த நிலையில் அனுஷா திடீரென வீட்டின் மாடியில் படுக்கை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
போலீஸ் விசாரணை
சம்பவ இடத்துக்கு தக்கலை துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன் நேரில் வந்து விசாரணை நடத்தினார்.திருமணமான ஒரே மாதத்தில் புதுபெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுப்பெண் தற்கொலைக்கு குடும்ப பிரச்சினை காரணமா? அல்லது காதல் காரணமா? என்பது குறித்து அருமனை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story